Thursday, December 08, 2005

Race to the bottom (1): Khushboo's morality

Actress Khushboo’s remarks that no educated man would expect his bride to be a virgin have sparked off passionate protests across Tamil Nadu. Her offensive remarks appeared in the Tamil edition of India Today weekly magazine (September 28, 2005 issue) which devoted a full page to her interview as part of a cover story on Sex & Single Women.

"காலாவதியாகும் கற்பு" என்ற தலைப்பில் இந்தியா டுடே (செப்டம்பர் 28, 2005) தமிழ்ப் பதிப்பில் (பக்கம் 23) நடிகை குஷ்பு பின்வருமாறு கருத்துரைத்திருந்தார்:

"பெண்கள் திருமணமாகும் போது கன்னித்தன்மை கலையாமல் இருக்க வேண்டும் என்பதுபோன்ற எண்ணங்களிலிருந்து நமது சமூகம் விடுதலையாக வேண்டும். கல்வி பெற்ற எந்த ஆண்மகனும் தான் திருமணம் செய்யப் போகிறவள் கன்னித்தன்மையோடு இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க மாட்டான். ஆனால் திருமணத்திற்கு முன்பு செக்ஸ் வைத்துக்கொள்ளும்போது கர்ப்பமாகாமலும் பால்வினை நோய்கள் வராமலும் பெண் தன்னை தற்காத்துக் கொள்ளவேண்டும்."


Translation:

“That a woman has to be a virgin at the time of her marriage is the kind of thinking from which society should be freed. No educated man would expect the woman he is going to marry to be a virgin. But women should protect themselves from pregnancy and venereal diseases if they were to engage in sex before marriage.”

குஷ்பு மேலும் கூறியதாவது:

"நான் காதலித்த நபரை திருமணம் செய்துகொண்டேன். நாங்கள் எங்களது உறவு பற்றி நிச்சயமாக இருந்ததால் திருமணத்திற்கு முன்பே சேர்ந்து வாழ்ந்தோம்..."

Noisy street protests by women were marked by ample display of footwears and brooms. Even lawyers, male and female, staged demonstrations during some of which Khushboo’s effigies were battered and burnt. Her remarks so offended public sentiment that different courts across Tamil Nadu were petitioned. Some went overboard with demands for Khushboo’s banishment from Tamil Nadu, even India.

All of the above are public expressions of outrage at what seemed to have appeared to many in Tamil Nadu as a morally corrupting and culturally demeaning statement. Khushboo’s remarks had come through more as an exhortation than an observation. Coming from a celebrity - cinema personality - whom some overly sentimental fans had even deified as a goddess, resulted in her utterance being perceived as all the more irresponsible. That such an outrage erupted on so large a scale – thanks partly to the orchestration by some political parties – is to be regarded as a healthy sign. It serves to show that Tamil / Indian society still remains attached to some fundamentals in terms of sexual morality. In fact, the same issue of India Today (Tamil edition) bannered the following survey finding across the bottom of the very page containing Khushboo’s interview:


82%: சென்னை பெண்கள் திருமணமாகும்போது பெண்ணின் கன்னித்தன்மை கலையாமல் இருக்க வேண்டும் என்று கருத்து சொல்லியுள்ளார்கள்.

On the other hand, it has been amusing to track the reactions of some sections of Tamil Nadu’s intelligentsia. They appear to be at the tail end of the wave that the Western world – in particular, the USA - had ridden for more than fifty years now – and is trying to get off. These more articulate members of Tamil Nadu society are using the same arguments that the free speech advocates and radical feminists in America had used over the years to talk Americans into allowing the pornification of society, and the rise of strident feminism that has led to de-feminization (in the guise of female empowerment). The consequences to American society are there for all to see: moral decadence and social degeneracy, marked by the undermining of the institutions of marriage and family.

These elements are seeking to portray the uproar over Khushboo’s remarks as a threat to the freedom of expression. Voltaire is being piously invoked to protect Khushboo’s right to express her views. On the other hand, there appears to be many out there who feel that society has to be protected from the sexual mores Khushboo is seeking to propagate.

Both sides of the ensuing debate are expressive in their own ways. The less articulate female members of society express their disgust at Khushboo’s remarks by waving chappals and brooms, which are understandably more readily accessible to them than polished speech. On the other hand, the more articulate section of society expresses itself by verbal rhetoric and exchanges conducted through the mass media and public stages.

Those articulating their support for Khushboo are flogging the ‘freedom of expression’ horse for all its worth. But ‘thinking’ should precede ‘expression’. It is the quality of thinking, particularly in terms of originality, that most of these advocates of ‘freedom of expression’ seem to be lacking. Their arguments are unmistakably direct importations from Western radical feminist discourse. It is a case of servile intellectual mimicry.

In fact, this controversy presents a good opportunity for Tamil / Indian society to explore an alternative to Western radical feminism. The likes of poetess Kanimozhi (Kalaignar Karunanidhi’s daughter) should take up this challenge instead of being limited to the ‘freedom of expression’ mantra. The free speech proponents are mocking the vociferous criticisms of Khushboo’s remarks as moral policing and intolerance. Seeking to reduce the debate to one about free speech will only serve to lose sight of the bigger and deeper issue. The bigger and deeper issue is about VALUES, not ‘freedom of expression’. (Note 1) (Note 2)

The Western world is already waking up to the damage inflicted on society by fanatical / radical feminism. A recent report by the Independent Women’s Forum (IWF) – USA – seeks to expose the hidden agenda of feminist / women’s studies in American colleges and universities. The report is titled: "Sex (Ms.) Education: What Young Women Need to Know (But Won't Hear in Women's Studies) About Sex, Love and Marriage." Ms Carrie Lukas, who authored the report, explains: “Too often, college women are getting a warped perspective on sex, love, and marriage. People might not be surprised to hear that young women get misinformation from much of pop culture, but they might be surprised to know that it can also be found in many college classrooms.” Lukas reviewed women’s studies textbooks and found that feminist authors had a tendency to criticize the institution of marriage as repressive for women and glorify promiscuity.

American society is already seeking to re-trace its steps back to days when values like sexual fidelity and self-restraint mattered. India’s feminists should take note and do some original / independent thinking before rushing out to exercise their right / access to ‘freedom of expression’.


Note 1:

பெண்மையையும் ஒழுக்கத்தையும் போற்றாத மேற்கத்திய தீவிரப் பெண்ணியம் :
கண்மூடித்தனமாகப் பின்பற்றும் தமிழகத்தின் பெண் இலக்கியவாதிகள்

கவிஞர் கனிமொழி (நக்கீரன் 16-11-2005) ஒழுக்கம், கட்டுப்பாடு என்பன தனியார் விருப்பஞ் சார்ந்தன என்னும் விதத்தில்:

"இதனை குஷ்புவுக்கும் சுகாசினிக்குமான பிரச்னையாகப் பார்க்காமல் பொதுவான பெண்ணினத்திற்கான பிரச்னையாகப் பார்ப்போம். இங்கே சிலர் தாங்கள்தான் எதையும் தீர்மானிக்க வேண்டும் என்ற முடிவில் இருக்கிறார்கள். அவர்கள் கருத்துக்கு எதிர் கருத்தோ, புதிய கருத்தோ சொல்லும் பெண்களை 'கற்பு' என்பதை காட்டி பயமுறுத்துகிறார்கள். பெண் எழுத்தாளர்கள் இதனைத் தொடர்ச்சியாக சந்தித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஒழுக்கம், கட்டுப்பாடு என்பதையெல்லாம் அவரவர்தான் நிர்ணயித்துக்கொள்ள வேண்டும். பொதுவான ஒழுக்கம் எல்லாவற்றிலும் சாத்தியமில்லை."



ஆண் பெண் சமத்துவம் என்பதற்காக ஆணின் ஒழுக்க மேம்பாட்டுக்காகப் போராடாமல் பெண்ணின் ஒழுக்கச் சரிவுக்குக் காரணம் கற்பிற்கும் விபரீதப் போக்கு:

வாஸந்தி (இந்தியா டுடே - தமிழ்ப் பதிப்பு - அக்டோபர் 12, 2005)கற்பும் கற்பிதங்களும்" என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையில் 'பண்பாட்டுக் காவலர்கள்' நையாண்டி செய்யப்படுகிறார்கள்:

"தமிழ்ப் பெண்கள் இனி நிம்மதியாக இருக்கலாம். அவர்களது மானத்தை பாதுகாக்க, வீரம் செறிந்த ஆண்கள் படை ஒன்று தமிழகத்தில் தயாராக இருக்கிறது. பெண் இனத்தைவிட அதிகமாகக் கவலைப்படுகிற பாதுகாப்புப்படை அது. எனென்றால் தமிழ்ச் சமூகத்தின் மானம், மரியாதை, கௌரவம் எல்லாமே பெண்ணின் யோனியில் பதுங்கியிருப்பதான அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்ட படை அது. இந்த நம்பிக்கை வசதியானது. அரசியல் தாத்பர்யம் கொண்டது. ஆண்-பெண் அதிகார சமன்பாடு மாறிவரும் நிலையைப் பொறுக்க முடியாமல் பெண்ணுக்கு எதிராக சாட்டையடி அடிக்கவும், கற்பு, பண்பாடு, ஒழுக்கம் போன்றவற்றை ஆண்கள் தாரை வார்த்துவிட்ட நிலையில் அவற்றைப் பேணிக் காப்பது, பெண்களின் பொறுப்பு மட்டுமே என்று சுட்டிக்காட்டவும் பயன்படும் ஆயுதம்........ தமிழ்ப் பண்பாட்டுக் காவலர்கள் என்று மார்தட்டிக்கொள்ளும் அரசியல்வாதிகளுக்கு தற்காலிக வெற்றி கிடைக்கலாம். அந்த வெற்றி தமிழ்ச் சமூகத்தின் கருத்துச் சுதந்திரத்துக்குத் தோல்வி."


குஷ்புவின் பேட்டி வெளிவந்த அதே இந்தியா டுடே தமிழ்ப் பதிப்பில் (செப்டம்பர் 28, 2005 - பக்கம் 35) கவிஞர்
சுகிர்தாணி "ஒழுக்கம் பெண்ணுக்கு மட்டுமா?" என்ற தலைப்பில் எழுதுகிறார். கோபத்தில் நிதானம் இழக்கிறார்:

"……… கற்பு என்னும் மதிப்பீடு வட்டத்திற்குள் ஆண்களை நுழைக்காத அல்லது நுழைக்க விரும்பாத இச்சமூகம் பெண்களின் கற்பு பற்றி உறுதியான எதிர்பார்ப்பை, நிலைபாட்டை வைத்திருக்கிறது. அந்த மோசடி அகராதியிலும் பிரதிபலிக்கப்படுகிறது. வர்ஜின் (virgin) என்ற சொல்லின் பொருள் குறிப்பாக பெண்களின் கன்னித்தன்மையைச் சுட்டிக்காட்டுகிறது. ஒருவனுக்கு ஒருத்தி என்ற பண்பாட்டுச் சாரத்தின் வழி நின்று திருமணத்தில் ஒருவனோடு இணையும்போது கன்னித்தன்மையும் கற்பும் எதிர்பார்க்கப்படுகின்றன. கணவனிடத்தில் கன்னித்தன்மையை இழந்தாலும் அவனோடு தொடர்ந்து வாழும்போது அவள் கற்புடையவளாக கருதப்படுகிறாள். ஆனால் இன்னொரு ஆடவனோடு கூடும்போது கற்பிழந்தவளாக சித்தரிக்கப்படுகிறாள்...................... ஆக கற்பு என்னும் சொல்லாக்கத்தை ஆண்பெண் இருபாலுக்கும் பொதுத்தன்மை உடையதாக இச்சமூகம் மாற்றட்டும். இல்லையெனில் அச்சொல்லையே அழித்தொழிக்கட்டும். இவற்றையெல்லாம் விட்டுவிட்டு கற்பு, பண்பாடு, ஒழுக்கம் போன்றவற்றை பெண்களிடம் மட்டுமே எதிர்பார்ப்பது எந்தச் சமூகத்திற்கும் அழகல்ல. அவசியமும் அல்ல."


ஒழுக்கச் சீரழிவுக்கு எதிரான கருத்துரைகளை "பாசிசம்" என்றும், "பெரும்பான்மைவாதம்" என்றும், "கலாச்சார மீட்புவாதம்" என்றும் திசை திருப்பும் கனிமொழியின் குழப்பவாதம் (இந்தியா டுடே - தமிழ்ப் பதிப்பு - டிசம்பர் 7, 2005) :

"............ நாஜிக்களின் பாசிசம் உள்பட எல்லா கலாச்சார மீட்புவாதங்களும் பெண்களை ஒடுக்குவதிலிருந்து தான் தொடங்குகிறது. பெண்ணின் தோள் மீது கலாச்சாரத்தை ஏற்றிச் சுமக்கச் செய்வதுதான் கலாச்சார மீட்டெடுப்பாக இருந்து வந்திருக்கிறது............. உடைக் கட்டுப்பாடு முதல் குஷ்புவிற்கு எதிரான போராட்டம் வரை அத்தனையும் பெண்களுக்கு எதிரான பேரியக்கமாகத்தான் உருவெடுக்கிறது. ......................"

ஒழுக்கம் பற்றி பேசும் ஊடகங்கள் ஆபாசத்தைத் தவிர்க்கவேண்டும் என்று கோருவதற்குப் பதிலாக, ஒழுக்கக் கேட்டுக்கெதிராக ஊடகங்கள் வெளியிடும் தகவல்கள் வெறும் விற்பனை நோக்கிய பண்டங்கள் என்று தள்ளுபடி செய்கிறார்
கனிமொழி:

"....... பெண்களுக்கென்று புதிய ஒழுக்கத்தை வரையறுப்பதில் ஊடகங்கள் ஆர்வத்தோடு முன்நிற்கின்றன. உடைக் கட்டுப்பாடு முதல் குஷ்பு பிரச்னை வரைக்கும் அந்தப் போக்கு, பல ஊடகங்களில் வெளிப்பட்டிருக்கிறது. பெண்களுக்கு மட்டுமேயான ஒழுக்க எல்லைகளை வகுப்பதை அவை ஒருபுறம் செய்து வருகின்றன; குரூரமான ஆபாசம் வெளிப்படும் பெண் படங்களை மற்றொரு புறம் வெளியிட்டு வருகின்றன. ஒரு புறம் இவர்கள் உருவாக்கும் ஒழுங்கை இவர்களே மறுபுறம் உடைக்கிறார்கள். இந்த வினோதமான மனப்போக்கை எப்படிப் புரிந்துகொள்வது? இவர்கள் பல்பொருள் அங்காடி நடத்துகிறார்கள். இதுவரை பெண் உடலை பண்டமாக்கிய இவர்கள் இப்போது பெண்ணின் ஒழுக்கத்தையும் கற்பையும்கூட விற்பனைப் பண்டமாக்கிவிட்டார்கள். இந்த ஊடகங்கள் போதிக்கும் ஒழுக்கத்தை எப்படி சீரியஸாக எடுத்துக் கொள்ள முடியும்?"

கனிமொழி 'சீரியஸாக' போதிக்க விரும்பும் ஒழுக்கம்தான் என்ன?


Note 2:


"திருமணத்துக்கு முன்பு செக்ஸ் .... ஆரோக்கியமல்ல!"

தமிழகத்தின் பிரபல பாலியல் துறை நிபுணரான டாக்டர் நாராயண ரெட்டி (ஜூனியர் விகடன் - 5.10.2005):

"...... திருமணத்துக்கு முன்பு செக்ஸில் ஈடுபடுவதால் ஒரு பெண்ணுக்கும் ஆணுக்கும் நல்லதைவிட கெட்டதே அதிகம்; லாபத்தை விட நஷ்டமே அதிகம். ஒழுக்கத்தையும், புனிதத்தையும் பாரம்பரியமாக மதித்து வரும் நம் இந்தியா போன்ற நாடுகளில், திருமணத்துக்கு முன்பே செக்ஸ் வைத்துக்கொள்வது குற்ற உணர்வையே ஏற்படுத்தும். இதனால் வரக்கூடிய பிரச்னைகளும், மன உளைச்சல்களும் ஏராளம்.

பொதுவாகவே உலகம் முழுக்க செக்ஸ் கலாச்சாரத்தில் பெரியளவிலான சீரழிவுகளும்,
பெண்ணியம், கற்பு என்கிற விஷயங்களில் தாறுமாறான போக்கும் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டுதான் போகிறது. கடந்த வருடம் மும்பையில் நடந்த உலகளவிலான செக்ஸாலஜிஸ்ட்கள் மாநாட்டில் பெரிதும் விவாதிக்கப்பட்ட விஷயம், நாடு முழுக்க நடக்கும் செக்ஸ் சீரழிவுகள் பற்றியும்தான். இதில் ரொம்ப ஆச்சரியமாக மற்ற நாட்டைச் சேர்ந்தவர்கள் கவனித்தது இந்தியாவைத்தான். மற்ற நாட்டில் நடக்கிற, நடந்து கொண்டிருக்கிற செக்ஸ் கலாச்சார சீரழிவுகளை விட இந்தியாவில் மிகவும் குறைச்சலான அளவே இந்த சீரழிவு இருப்பதும் அலசப்பட்டது. இந்திய நாட்டின் பண்பாடு கலாசாரம்தான் இதைக் காப்பாற்றுகிறது என்றே பலரும் பேசினார்கள்.

...... திருமணத்துக்கு முன்பு செக்ஸ் அனுபவம் பெற்ற ஆண்கள் இந்தியாவைப் பொறுத்தவரை பெரிய அளவில் இருப்பதாக தெரியவில்லை. ஆண்களோடு ஒப்பிடும்போது பெண்கள் இன்னும் கூட மிகமிகக்குறைவான அளவே இப்படி ஒரு அனுபவத்தைப் பெற்றிருப்பதாக தெரிகிறது. சுருக்கமாக சொல்வதானால், தற்போது சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் 'திருமணத்துக்கு முன்பே கன்னித்தன்மை இழப்பது' என்பதை இங்குள்ள பெண்கள் பெரிய தவறாகவே நினைக்கிறார்கள்.

இதில் கவனிக்கத்தக்க இன்னொரு விஷயம், மற்ற மாநிலங்களை ஒப்பிட்டு கவனித்ததில் தமிழகத்தில் ஆரோக்கியமான போக்கு இருப்பதாகவே பட்டது. திருமணத்துக்கு முன்பே செக்ஸ் உறவும் செக்ஸ் ரீதியிலான பிரச்னைகளும் கலாசாரச் சீரழிவுகளும் தமிழகத்தில் மிகமிக குறைவான விகிதத்தில்தான் இருக்கிறது. இன்றும் கற்பில் முதன்மையான நாடு நமது தமிழ்நாடு என்பதில் மாற்றமில்லை.

அதேசமயம், கொஞ்சம் கொஞ்சமாக சீரழிவுகள் தலைதூக்க ஆரம்பித்திருக்கின்றன. இதை இப்படியே விட்டால் இன்னும் பத்து இருபது வருடங்களில் நமது தமிழ்நாடும் செக்ஸ் சீரழிவில் முதலிடத்தை பிடித்துவிடக்கூடிய அபாயம் இருக்கிறது. இதை தடுக்க, செக்ஸ் கல்விகளும், அதற்கான விழிப்பு உணர்வுகளும் ஏற்படுத்த வேண்டிய கட்டத்தில்தான் நாம் இருக்கிறோம் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

பொதுவாக, திருமணத்துக்கு முன்பு செக்ஸ் என்பது தவறு என்பதைவிட, ஆரோக்கியமானதல்ல! இதுதான் யதார்த்தம்."


நிர்மலா பெரியசாமி (நக்கீரன் 16-11-2005):

"சமுதாயத்தில் நடக்காததையா சொல்கிறோம் என்று குஷ்பு, சுகாசினி சொல்வதை ஏற்க முடியாது. சமூகத்தில் எல்லா காலத்திலும் திருட்டுகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. கற்பழிப்புகளும், விபச்சாரங்களும் நடந்துகொண்டிருக்கின்றன. அதற்காக, கேர்ஃபுல்லா திருடு, மாட்டிக் கொள்ளாமல் கொலை செய் என்று சொல்ல முடியுமா? ஒழுக்கக்கேடு என்பது கேன்சர் மாதிரி. கலாச்சார கட்டுப்பாடுகள் இருக்கும் போதுதான் தவறுகள் ஒரு எல்லைக்குமேல் நடக்காமல் இருக்கும்."



Related blogs:

American Society: Myths and Realities (1 June 2005)


Comments may be forwarded to: anbarul@yahoo.com